திரு பழனிகுமார் அவர்களுக்கு ரெட்டை வாழ்த்துக்கள்--பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து
![](https://eluthu.com/images/loading.gif)
திரு பழனிகுமார் அவர்களுக்கு ரெட்டை வாழ்த்துக்கள்
பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து
******************************************************************************
ஆயிரம் கவிதைகளில் அலையலையாய்
வீசிய உணர்வுகளும் பேசிய உணர்வுகளுமாய்..
அறிவுரை தாங்கி வந்த அலைகளாய் சில ..
அன்பின் ஆழம் நிறைந்ததாய் பல...
சமுகத்தின் அவலங்கள் யாவும் சாடி
ஓங்கி அடித்த சம்மட்டி அடிகளாய் சில
சாதிக் கொடுமை கண்டு வெடித்த
எரிமலை பிழம்பு உணர்வுகளாய் பல...
இடரா வாழ்க்கைக்கு அழகான பாதை
வகையாய் வகுத்து சொன்ன வழிகளாய் சில
சுடராய் ஒளிவீசி உயர்வாய் வாழுதற்கு
அறிவுரைகள் அவரவர்க்குமாய் பல...
நாட்டுக்கென வாழ்ந்த தலைவர்களின்
தியாகமும் வீரமும் பேசும் வரிகளாய் சில
நாமும் அவர்கள் போல் வாழ்ந்திட
நயமாய் கூறும் அறிவுரைகளாய் பல...
இயற்கை எழிலினையும் உழவின் சிறப்பினையும்
நட்பின் உயர்வினையும் நாட்டின் நடப்பினையும்
கவி சொல்லி பாடியதில் கவிஆயிரம் மேலாகி
பண்புள்ள கவிஞராய் அன்புள்ள கவிஞராய்...
உணர்வுகளை ஒன்றாக்கி அடுக்கிய பக்கங்களில்
எழுத்தினிலே மிளிர்கின்றீர் உயர்வான கவிஞராய்
பழனிகுமாரவரின் உணர்வலைகள் அரங்கேறும் நன்னாளில்
வாழ்த்துகிறேன் கவிவளர இன்னுமாய் அலை உயர...
இன்னுமின்னுமாய்... ஆயிரம் கவிதைகள்
படைத்திடுவீர் விருந்தெனவே பலப்பல உணர்வோடு
பல்லாண்டு நலமுடன் வாழ்ந்திடவே இந்நாளில்
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறையாசியுடனே...
வாழ்த்துக்களுடன்...
சகோதரி
சொ. சாந்தி