ஆறவில்லை
மருத்துவர் பலரை
பார்த்தாயிற்று....
மருந்துகள் பலவும்
தந்தாயிற்று...
ஆயினும் -
அந்தப் புண் ஆறவில்லை.
காரணம் ?
அது
தீயினாற் சுடப்பட்டதல்ல,
நாவினால் சுடப்பட்டது !
(தீயினாற் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு - 129)