சமா்பணம்

உயிரும் மெய்யும் சோ்ந்தது தான் தமிழ்!!!!!
என் உயிருக்குள் கலந்து இருப்பது மெய்யான உன் நட்பு!!!!!!
கலங்கரை விளக்காய் எனக்கு ஒளியிட்ட நீ!!!!
நடுக்கடலில் தத்தளிக்கவிட்டு மறைந்துபோனாய் எங்கோ????
பாதை தொலைத்தவனாய் தவிக்கிறேன் ஆழியில் நான்!!!
கற்போன்ற என்னை உன் உ(ஒ)ளி !!!!
கொண்டு சிலையாய் வடித்தாய்- சிலைக்கு
உயிரும் உருவமும் அளிக்கும் தருணத்தில்
உணா்வருத்து சென்றாய் எங்கு????
ஆந்தையின் அலறலும் ; யானையின் பிளிரலும் ;
எவருடைய பேச்சிலும் கணிக்கிறது-ஏனோ!!!
உன் குரல் கேட்க என் செவி மறந்தாலோ???
வன வாசம்,சிறை வாசத்தை விட மிக கொடியதே...
நீ எனக்கு அளித்த மௌன வாசம்...
பேசி மகிழ்ந்த நாட்கள் பேசும் படமாய் ஒளிபரப்பாகிறது - என் மனதில்...
என் வேதனைக்கு வேலிட்ட நீ!!!!என்னை சோதிக்கவா சென்றாய் என் வேலியை தாண்டி????
இன்று இலையுதிா்ந்து நிழல் இழந்து,நிறம் இழந்து - நான் இருந்தாலும்
உன் பாசக்காற்று என் மீது வீசும் போது-நிச்சயம்
வீசும் தென்றலாய் துளிா்விட்டு; நிழல் கொடுப்பேன் பசுமையாய்!!!
ஆறுகோடியில் எனக்கென கிடைத்த நூறு கோடியே!!!
என் வாழ்வுக்கு தோ் கொடுத்த கொடியே!!!-உன்னை
தேடித்தேடித்!!! என்னுள் தொலைக்கிறேன் தேடுதல் சுகமென்று....
மேகம் போன்ற சோகம் என் மனதை அடைத்துவிட்டதால்
உணா்விழந்த மனிதனாய்; வேராறுத்த மரமாய்;
நாணலை போல நான் இருப்பது எதற்கென்று நிற்கிறேன் என் தனிமையில்.....
என் தோழிக்கு சமா்பணம்!!!!

எழுதியவர் : சியாம் நெ.பிரகாஷ் (11-Oct-14, 4:45 pm)
பார்வை : 112

மேலே