காதல் சில்மிஷி
என் அறை
முழுதும்
பூ வாசம்
அலமாரியில்
உன்னிடம் களவாடிய
கர்ச்சீப்
உடை போட்டு
திரியும்
உயிரோவியம் நீ
நடை போட்டு
திரியும்
நந்தவன தோட்டம்
நீ
நீ தலை
துவட்டினாய்
குற்றாலச்சாரல்
விழுந்ததாய்
கூறுகின்றனர்
நீ போகுமிடமெல்லாம்
போக்குவரத்து
நெரிசல்
தேவதை தெருவில்
போனதாய்
செய்திகள் சொல்லும்
உன்னால்
தீயணைப்பு துறையினருக்கு
தீவிர வேலை
கருகி போன
இதயங்களை
காப்பாற்ற விரைகின்றன
மருத்துவர்கள் கூடி
ஆலோசனை செய்கின்றனர்
உன்னால்
பைத்தியம் பிடித்தவர்களுக்கு
எப்படி
வைத்தியம் பார்ப்பதென்று
நீ இருக்கும்
தெருவில்
தேவதாஸ்கள் அதிகம்
எனவே
சலூன் கடையெல்லாம்
சாராயக்கடை ஆகின்றன
உன்னால்
புதுக்கவிதை
புத்தகங்களின்
எண்ணிக்கை
ஏறிக்கொண்டே போகிறது
உன் தலையில்
மரணமடைந்த
பூவிற்கு
என் கணக்கு
நோட்டில்
கல்லறை கட்டியுள்ளேன்
இன்னும் தொடரலாம்
உன்னைப்பற்றி
எழுதினால்
முற்றுப்புள்ளி ஏது.....?