சகஜம்

நிலம் நோக்கினாள்..
என்னைக் காணாத போது!
முகம் கவிழ்ந்தாள்..
என்னைக் கண்ட போது !
நாணமா..என்றேன்!
தலை நிமிர்ந்தாள்!
மெல்லிய(?) குரலில்
முழங்கினாள்!
"வீட்டுக்கு வர
இத்தனை நேரமா?
ஊர் சுற்றி வந்துவிட்டு
இதில் கேள்வி வேறு
நாணமா..." என்று.
நிலம் நோக்கினேன் !
தலை கவிழ்ந்தேன் !
"போதுமா?" என்றாள்!
இன்றைக்கு இது போதும்
என்றேன்!
..என்னைப் போல்
எவ்வளவோ பேர்..
வாழ்க்கையில் இதெல்லாம்
சகஜமப்பா!