நிஜமாய் கேள்விக்குறியாய்

உனக்கு விளக்கித்தான்
என் காதல் புரியவேண்டுமென்றால்
சற்று புதிரான கேள்விதான்
என் காதலும் எனக்கு

பெரும்பாலான பெண்கள்
புரிந்ததை புரியாததுபோலும்
புரியாததை புரிந்தது போலவும்
காட்டி கொள்வதால்
நிஜமாய் கேள்விக்குறிதான்
என் காதலும் எனக்கு

எல்லா கவிதையும் உன்னைப்பற்றிதான்
நீயும் தமிழ்பெண்தான்
கவிதை ரசிக்க தெரிந்தும்
அர்த்தமாய் என் காதல் சொல்லியும்
இன்னும் மௌனம் சாதிக்கிறாய்
நிஜமாய் கேள்விக்குறிதான்
என் காதலும் எனக்கு

என்றாவது பதில் வரும்
என்றே காத்திருகிறது
என் மனமும் என் காதலும்
நிஜமாய் கேள்விக்குறியாய்
என் வாழ்க்கையும் உன்னால்

எழுதியவர் : ருத்ரன் (14-Oct-14, 6:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 73

மேலே