யுகங்கள் கடக்கட்டும்

மழை பொழிந்திடும் போது
--------குடை ஒன்று வேண்டும்
மனமுன் நினைவுகள் பொழிந்திடும் போது
--------கவிதை ஒன்று சொல்ல வேண்டும்
மழையும் மனமும் இணைந்து பொழிந்திடும் போது
--------அருகில் கைகோர்த்து நீ நடந்து வரவேண்டும்
குடையையும் கவிதையையும் மறந்து விட்டு நாம்
--------பாதையில் நனைந்து நடக்க வேண்டும்
மின்னல் கீற்று ஒன்று வெட்ட இடியோசை தொடர
-------அச்சத்தில் நீ என்னை அணைத்திட வேண்டும்
அழகிய அற்புதமான அந்த இனிய தருணத்தில்
---------யுகங்கள் நம்மைக் கடந்திட வேண்டும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Oct-14, 5:05 pm)
பார்வை : 148

மேலே