நிச்சயம்எப்போது

தீக்குச்சி போல் நீ
தெருவில் என் வீடு கடந்து
செல்கின்றாய் தினம் நடந்து..!
தெரியுமா உனக்கு ..?
ஒவ்வொரு முறையும்
என்னை உரசிக்கொண்டுதான்
போகின்றாய் என்று!
மனதில் பற்றி எரிகிற நெருப்பை
உன் பார்வையாலே
அணைக்கிறாய்!
தென்றல் கடந்து போன பின்னே
என் மனதில் புயல் வீசுவதேன்
புரியவில்லை!
இரண்டாம் எண்..மூன்றாம் எண்
என தினமும் கொடி ஏற்றி
ஆறாம் எண் கொடி வரை
ஏற்றுகின்றேன்!
உன் நினைவை மனதில்
பதியன் போட்டு வளர்த்து விட்டேன்..
உன் மனதில் என்னை
எப்போது பதிய வைப்பாய்
என் கண்ணே!
நம் திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட வேண்டாம்..
நீ. மனது வைத்தால் ..
இங்கேயே நிச்சயிப்போம்!

எழுதியவர் : karuna (15-Oct-14, 10:05 am)
பார்வை : 99

மேலே