ஓடிக்கொண்டே இரு
இரவு நேரம் ..
வழியெல்லாம் முட்கள்..
தூரத்தில் விளக்கு!
நம்பிக்கை?
தனியாக பயணம்
பிறந்தது முதல்
இறக்கும் வரை..
உண்மை?
தடுமாற்றம் இல்லை..
சேருமிடம் தெரியும்...
இன்னும் வேண்டும்..
ஊன்றுகோல்?
வருகையும்..
செல்கையும்..
வெறுங்கை!
ஆசைகள்?
விழுதலும்..
எழுதலும்..
இயற்கை..!
விசனங்கள்?
உயர்தலும் ..
தாழ்தலும்..
உலகுக்கு..!
உனக்கு?