என்னவனே

கண்ணீர் சுமந்து
கனத்து போனது
என் விழிகள்..
உன்னை காணாமலே.....
மாற்றான் விழி வழி
உன்னைத் தேடித் தேடி
ஊசலாடும் உயிரில்
அறைந்த உன் பெயர்
துடிக்கும் இதயத்திலும் இழுக்கும் மூச்சிலும்
இன்னும் பத்திரமாய்!
உன் அசைவுகளின்
சிணுங்கல்களில் உயிர் தடவி
எழுதிய வார்த்தைகளே
இன்னும் ஆழமாய் உணர வைத்தது
என் காதலை !
ஜன்னலோரம் வரும் தென்றல்
தலை வருடும் பொழுதுகள்
உன் மடி தந்த சுகத்தை
ஞாபகப்படுத்த..
நிசப்தமான இரவுகளில் கண்ணீரும்
விடியல்களில் உன் நினைவுகளும் என
நீண்டு கொண்டே செல்கிறது
உன்னை தொலைத்த என் நாட்கள்!!
ஒரே ஒரு முறை காண வேண்டும்!
உன்னை மட்டுமல்ல
என்னவனே
நான் தொலைந்த உன் மனதையும்!