வீதி சுத்தம்

வான விதானத்தில்
மேக ஒட்டடைகள்..

தலையால் தடவி
வானைச் சுத்தமாக்கியது
பனை மரம்..

வந்துவிட்டனவே மீண்டும்-
வருத்தத்தில் பனைமரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Oct-14, 6:53 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே