தனிமையின் குழந்தை

தனிமையின் தாலாட்டில்
வலிகளின் தொட்டிலில்
ரணங்களின் சுமையில்
போர்த்திக் கொண்டு உறங்கும்
துன்பத்தின் மழலை நான்!
வலிகளின் மரணப் பிடியில்
சிக்கித்தவித்த போது
தனிமை..
என் ஆறுதல்!
துன்பத்தின் துரத்தலில்
நான் துவண்ட போது
தனிமை ...
என் துணைவன்!
சுமைகள் என்னை ஆழமாய்
அழுத்தும் போது
தனிமை..
என் தோழன்!
கண்கள் தன் கண்ணீரால்
என்னை எரிக்கும் போது
தனிமை....
என் தாய்!
இதயத்தின் காயங்கள்
மனதை நெரிக்கும் போது
தனிமை.....
என் சகோதரன்!
இறுதியில் கண்ணீரில்
நான் மூழ்கும் போதும்
தனிமையே....
என் வாழ்க்கை!
என் வசந்தம்!
என் மகிழ்ச்சி!