என் ஆசைகள்

தென்றலைத் தழுவி
மரக் கிளையின் மடியில்
அசைகின்ற இலைகளை
அணைத்தபடி
ஒரு முறை உறங்கிட
ஆசை....

மலர்களின் மடிப்புக்களில்
விழுகின்ற பனித்துளியில்
எனை மறந்து குளித்திட
ஆசை...


வானத்தின் வியர்வையில்
தெறிக்கின்ற மண்வாசனையில்
மனம் தொலைத்து உருகிட
ஆசை...


புன்னகைக்கும் குழந்தையின்
பிஞ்சு விரல்களில்
முகம் புதைத்து
ஸ்பரிசங்களில் லயித்து
மீண்டும் பிறந்திட
ஆசை......



விடிகின்ற வானில்
மங்கலான வெளிச்சத்தில்
அகலும் நிலவின் பின்னால்
குடை பிடித்து சென்றிட
ஆசை....


மலைகளின் முகப்பில்
போர்த்திய பனியை அள்ளி
இதயத்தின் ஓரங்களில்
வலியின் தழும்புகளுக்கு
மருந்திட ஆசை...

கிடைக்காத வாழ்வு இதை
ஒரு முறை வலியின்றி
வாழ்ந்திடவும் ஆசை...
ஊருக்கு இவை பேராசை!
எனக்கு இவை என்றுமே நிராசை!!

எழுதியவர் : பவிதா (19-Oct-14, 9:55 am)
Tanglish : en aasaikal
பார்வை : 104

மேலே