நுனி நாக்கில் ஊரும் தீபாவளி

கரும்பும் சுவை பொங்கலும் அறுவடை திருவிழா
நோன்பும் பிரயாணி பகிர்தலும் ரம்ஜான் பெருவிழா
கேக்கும் வான்கோழி வருவலும் கிறிஸ்து தனிவிழா
சுண்டலும் பொறியும் ஆவலுமாய் சதுர்த்தி தினவிழா

என் நாக்கிற்கு அடிமை ஆகி எண்ணி பார்க்கிறேன்
பாரத விலாசில் நண்பர்களுடன் கொண்டாடுகிறேன்
ஒரு நாள் உண்டு மகிழும் விழாக்களின் நடுவிலே
நாட்கணக்கில் ஏன் வாரக்கணக்கில் உண்டு மகிழ

லட்டு ஜிலேபி மைசூர்பாகு குலோப்ஜாமூன் இனிப்பு பூந்தி
சேவு கைமுறுக்கு சீவல் தேன்குழல் ஓமபொடி காரா பூந்தி
இட்லி மட்டன் குருமா முறுமுறு வருவலுடன் உணவு விருந்து
இவையெல்லாம் ஜீரணமாக சூரணம் லேகியம் கூட கை மருந்து

எங்கும் எதிலும் எங்களுக்கு சாய்ஸ் அதிகம் வேண்டும் என்று
ஆதங்கத்துடன் அலசிபார்க்கும் என்னை போன்றோருக்கு
புத்தாடை இனிப்புகள் பட்டாசு பலகாரம் பரிசு பொருட்கள் என
எங்கள் எல்லாருக்கும் சாய்ஸ் ஒ சாய்ஸ் தீபாவளி திருவிழா ...

எழுதியவர் : கார்முகில் (19-Oct-14, 2:06 pm)
பார்வை : 263

மேலே