என் முதல் இறுதி காதல்

உன்னோடு என் காதல்
விழி மீது விழி மோதல்
உன் காதல் இல்லையெனில்
அன்றோடு நான் சாதல்!
காதலிக்க மறுக்கின்றாய் - என்னை கண்டாலே வெறுக்கின்றாய்
உன்னை பார்த்த நாட்களிளே விண்னைநோக்கி பார்த்திருந்தால்
மண்ணில் அந்த மழை துளியும் என் மனம் நிரப்பி போயிருக்கும்
என் மனம் நிரம்பி இருப்பவளே! என்னை விரும்பி வருவது எப்போது?
உன் நினைவாய் நான் வைத்த காட்டுமல்லி பூச்செடியும்
வண்டின் மேல் மையல் கொண்டு சிரிக்கின்றது
நீ சூடும் பூவும் என்னை சுடுகின்றது
நாடும் வண்டும் என்னை கண்டு நகைகின்றது
என்ன இது காதல் என்று எனக்குள்ளே நோவேனோ
உன் கை பற்றி கனையாழி மாட்டிவிட மாட்டேனோ
உன் விரல் பற்றி சிதை முன்னே வளம் வராமல் போவேனோ
கண்ணே உன் தேகமதை காணாமல் சாவேனோ!

எழுதியவர் : சித்தார்த்தன் சிவா (19-Oct-14, 6:04 pm)
பார்வை : 102

மேலே