உயிர் காவு வாங்கவே உயிர் காத்து வாங்கி உலகு வந்தாயோ

உயிர் காவு வாங்கவே ...
உயிர் காத்து வாங்கி ..
உலகு வந்தாயோ ... மனிதா ?

அமைதி நகரம் ...
தடுக்கி விழுந்த குழந்தை ...
தவித்து போய் தூக்கிய அம்மா ...

மிட்டாய் வாங்கி வருவதாக
சொல்லி கடை வந்த அண்ணன் ..
மீண்டு வருவான் என காத்திருக்கும் தங்கை ...

பண்பு படிக்க பள்ளி செல்லும்
சிறார்கள் ..
நகர் நடுவே ... காந்தி சிலை ..

ஏகபட்ட கனவுகளோடு நகரம்
இயங்க ....

கயவன் வந்தான் ....
தோள் பையில் இருப்பது அத்தனை பேரின்
கனவுகளையும் சிதைக்க போவது அவனுக்கு
தெரிந்தும் .. தெரியாதது போல் ...

பையை இறக்கி வைத்துவிட்டு நடக்கலானான் ..
சிறிது தூரம் நகர்ந்ததும் .. பொத்தானை அழுத்தினான் ..

வெடி சத்தம் காதுகளை கிழிக்க ...
நகரமே சமாதியானது .....

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (19-Oct-14, 10:50 pm)
பார்வை : 103

மேலே