நீ வஞ்சகக் கடல் தானே

உண்ண உணவின்றி
உருக்குலைந்து போனவரை
பெரும் அலையால வந்தடித்து
வாழ்க்கையைக் கெடுக்கின்றாய்

காற்றோடு உறவாடி
கடலலையை தூதனுப்பி—நீ
அடிக்கும் கூத்துகளால்
மானிடரைக் கொல்கின்றாய்

மீனவக் குடும்பமென
கடலோரம் வாழ்பவரைக்
கரையேறி மேல வந்து
கூண்டோடு அழிக்கின்றாய்

பயணம் செய்கின்ற
பன்னாட்டு மக்களையும்
உன்னோடு சேர்த்தனைத்து—அவர்
உயிரை எடுக்கின்றாய்

உப்பு நீரால முகம் கழுவி
பொங்கிவரும் நுரையாலே
ஒப்பனை செய்து—அழகாய்
நீ காட்சி தந்தாலும்

கெடுப்பதே நோக்கமென
கொள்கையாய்க் கொண்டு
படைத்த உயிர் அத்தனையும்—சாகடிக்கும்
நீ வஞ்சகக் கடல் தானே!

எழுதியவர் : கோ.கணபதி (20-Oct-14, 8:43 am)
பார்வை : 87

மேலே