துணிவே துணை

இறக்கை வெட்டிய பின்னும்
பறக்கத் துடிக்கும் பறவை போல்..

வால் அறுந்த பின்னும்
கவலை கொள்ளாமல் ஓடும்
பல்லி போல்..

புண் பட்ட பின்னும் கர்வம்
குறையாத சிங்கம் போல்..

பட்டிணி போட்டாலும் பலம்
கொண்ட யானை போல..

கொஞ்சம் நீர் கிடைத்தாலும்
நீந்தி ஓடும் மீன் போல்..

மழையை எதிர் பார்ககாத
கிணற்று நீர் போல்..

அடி பட்ட பாம்பு குறி வைத்து
தாக்குவது போல்...

மொட்டை போட்ட பின்னும்
முளைத்து வரும் முடி போல்..

கவனம் சிதறாமல் உன்
இலட்சியத்தை நோக்கி
நடை போடு..

வரும் தடைகளை படியாக
எடை போடு...

தூற்றுவோரை விட்டுத் தள்ளு
தைரியத்தைக் கையில் எடு...

விவேகம் இழக்காதே வெறுப்பை
வளர்க்காதே போர் புரியாமலே
வெற்றி உன் பக்கம்....

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (20-Oct-14, 8:22 am)
Tanglish : thunive thunai
பார்வை : 486

மேலே