கீழ்ப்பாக்கம்
விழிகள் மூடுவதற்குள்
விடியல் முந்துகிறது
கால்களை கட்டியதோ
நொடிகள் நொண்டுகிறது
வல்லாரை வேண்டுமோ
பசிக்க மறக்கிறது
தொலைக்காட்சி பெட்டியோடு
சம்மந்தம் கொண்டதோ
புத்தகத்தில் உன் படம் ஓடுகிறது
நோய்வாய்பட்டதோ
வீட்டுக்கண்ணாடி அழகாய் காட்டுகிறது
காதல் வந்ததோ
காகிதத்தை கைகள் நாடுகிறது
வில்லங்கம் ஆனதோ ஏன் அந்த
கீழ்ப்பாக்கம் என்னை தேடகிறது