தீபாவளி வலி

உயிரற்ற ஒன்றுக்கு
மேலாடை சுற்றுகிறோம்
உடம்பின் ஓர் ஆடைக்காய்........

ஒளிர திரிவைப்பதென்னவோ நாங்கள்தான்
வீட்டில் ஒளியில்லை!

வண்ணங்களை பூசிப்பூசி
கரியாகிபோகிறது எங்கள் மேனி !

திரிகளில் வைக்கும் நெருப்பு - எங்கள்
உயிர் நரம்புகளில் வைக்கப்படும் கொள்ளி

நெருப்புகளின் விளையாட்டில்
நாங்கள் வெடித்துச்சிதறிப் போகிறோம்....!

வெடிக்கும் உங்கள் தீபாவளி
எங்கள் வாழ்வில் தீராவலி!

மருந்துகளே காயமாக்கும்
விந்தையான கொடுமை
எங்களுக்கு மட்டும்தான்.....

சாவும்கூட எங்களது பிழைப்பில்தான்
முதலாளிகளின் பிழைப்பும்கூட
எங்கள் சாவில்தான் !


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (21-Oct-14, 12:21 pm)
Tanglish : theebavali vali
பார்வை : 81

மேலே