இனிய தீபாவளி

வசந்தம் வீசட்டும்
வாசல்கள் தோறும் - எம்
சொந்த மாகட்டும் - உன்
வாழ்த்துக்கள் யாவும்
வா... சந்தம் பாடு...
வண்ணப் பூமாலைதொடு...
தேன் சிந்தச்சிந்தக்
கவிதை கொடு...
என் இனிய தீபாவளியே...
ஒளிசிந்தி
உயர்ந்த சிந்தனை கொடு
ஒரு அந்தி
விடியலாக உன் தீபம் கொடு...