இன்னுயிரும் வாழ்ந்திருக்கும்

பிணையொத்த நடை
கோணல்விற் புருவம்
மதியொத்த வதனம்
மலர்கொண்ட தேகம்

காரொத்த கூந்தல்
நேர்க்கொண்ட நோக்கம்
தேன்கொண்ட வன்சொல்
தேவமிர்த மென்றோள்

இவையொன்றாவது பிழையின்
இன்னுயிருமினிதே பிழைத்திருக்கும் !!!

எழுதியவர் : கார்த்திக் (22-Oct-14, 10:48 pm)
பார்வை : 99

மேலே