தீபாவளி♥லி♥ விருந்து - ப்ரியன்

இரவு உன்னை வரவேற்க்க
முத்தாய்ப்பாய் இருக்குமென
ஆயிரம் வாலா க்களை
கொளுத்திவைத்தேன் நான்
பயந்துகொண்டே

மத்தாப்பாய் எரிகிறது
உன்னில் புன்னகை ♥♥♥

விடியற்காலை
குழந்தைகளுடன் போட்டியிட்டு
சங்குசக்கரம் புஸ்வானங்களை
நீ ஏற்றிவைக்கிறாய்

என்னில்
காதல் பற்றிக்கொள்கிறது ♥♥♥


எண்ணை குளியல் முடித்து
புத்தாடையுடுத்தி
தலைமுடி உலர்த்துகிறாய்
என்னருகில் நீ
நீர் சொட்ட சொட்ட

நிரம்புகிறது
என்னுள் காதல் ♥♥♥

இன்று முழுவதும்
கேட்டுக்கொண்டே
இருந்தேன் நான்
வெடிச்சத்தங்களோடு
சந்தோஷமாய்

நடைபோடும் உன்
கொலுசொலிகளையும் ♥♥♥

இனிப்புகளுக்கு பின்
தீபாவளி மருந்தாய்
என் காதுகளுக்கும் எட்டியது
உன் வார்த்தை

ஆன்டி
நான் கிளம்பறேன் ♥♥♥

சந்தோஷ நினைவுகளாய்
சிதறிக்கிடக்கிறது
தெருக்களில்
வெடித்த காகிதங்களும்

என்னுள்
உன் நினைவுகளும் ♥♥♥

(இரண்டாம் சந்திப்பு - ப்ரியன்)

எழுதியவர் : ப்ரியன் (22-Oct-14, 11:20 pm)
பார்வை : 196

மேலே