கோட்டு மொழி

"அப்பா திட்டும்"
அம்மா கத்தினாள்
"அம்மா அடிப்பாள் "
அப்பா கத்தினார்
இரண்டையும் கேட்டுப்
பழகிய மழலை
கோட்டு மொழியில்
எழுதி இருந்தது
"உலகம் உருண்டை,
உள்ளே காலி!
வண்ணக் கோர்வை ,
வாழ்க்கை நெளிவு !"
எப்போது புரியுமோ?!
இவர்களுக்கு ...

எழுதியவர் : அபி (23-Oct-14, 5:49 am)
பார்வை : 206

மேலே