இணைய பேசி

பேசுங்க அம்மா என்றான் பையன்
சற்று தயக்கத்தோடு கண்களை சரிசெய்து
மகளின் முகத்தை கண்டாள் தாய்,

எப்படிமா இருக்க , உங்கிட்ட பேசியே
ரொம்ப நாளாச்சு எதாச்சும் சேதியாம்மா
மகள் ஆவலாய் விசாரித்தாள் ,

என்னடி பேசுற புள்ள முகத்த பாக்க
காரணம் வேணுமாடி, உன் கல்யாணத்துக்கு
அப்புறம் இந்த அம்மாவயே மறந்துடில்ல ,

அம்மா ஏன் இப்படியேல்லாம் பேசுற
என்னைக்கும் நா உன் புள்ள தான
இதுக்காக ஏன் இப்ப அழ ஆரம்பிக்கிற ,

இல்லடி நான் அழல , அது சரி புள்ள
புறந்திருக்குனு சொன்னியே நல்லா பாக்குறியா
எப்படி இருக்கான்டி எம் பேரன் ,

அடிக்கடி கேக்குறாம்மா அவன் ப்ரண்ட்ஸ்
நிறைய பேருக்கு பாட்டி இருக்காங்கலாம்
என் பாட்டி எங்கனு கேக்குறான் ,

உன்ன கட்டி முத்தம் கொடுக்கனும்
போலிருக்கு தாயி, சரி என் பேரன்
முகத்தை கூட காட்ட மாட்டியா எனக்கு ,

ஐயோ இதோ கூப்புடுறம்மா, டேய்
இங்க வாடா ,அப்புறம் விளையாடலாம்
வந்து உன் பாட்டிய பாரு ,

ஐ பாட்டியா,குரல் மட்டும் கேட்க
எல்லாம் சட்டென மறைந்து விட்டது ,
டேய் தம்பி என்னடா ஆச்சு ,

ஒன்னும் இல்லமா நெட் டிஸ்கனெக்ட்
ஆயிடுச்சு கொஞ்சம் இறு மறுபடியும்
ஸ்கைப்ப கனெக்ட் பண்றன்,அக்கா வந்துட்டாபாரு,

அந்த அம்மாவின் முகம் ஏக்கத்தோடு
மீண்டும் பார்த்தது கணினி திரையை...

எழுதியவர் : (23-Oct-14, 3:07 pm)
சேர்த்தது : க.சண்முகம்
Tanglish : yinai pesi
பார்வை : 62

மேலே