உன் பெண் இனங்களை காத்திடு 555

பாவைகளே...

உன் சிந்தனையை செதுக்கிவிடு
கூர்மையான அறிவால்...

நீ வாங்கும் உன்
பட்டங்களை...

நீ முன்னேறும் படிக்கட்டுகளாய்
மாற்றிவிடு...

அடிமை என்னும் எண்ணங்களை
அகற்றிவிடு...

அறியாமை என்னும்
விளக்கை அணைத்துவிடு...

புரட்சி தீபமாய்
துளிர்விடு...

வரதட்சணை கேட்கும்
பேய்களை விரட்டிவிடு...

கைம்பெண்ணை கல்லறையாய்
பார்ப்பவரை சாம்பலாய் பொசுக்கு...

சுய சிந்தனை
இல்லாத வாழ்க்கை...

சிறகு இல்லாத பறவை...

சுயமரியாதை இல்லாத
வாழ்க்கை...

சுயநினைவே
இல்லாத வாழ்க்கை...

எல்லோர் இதயங்களையும்
உன் அன்பால் வென்றுவிடு...

அறிவு என்னும் ஒளியால்
உன் வாழ்க்கையை மாற்றிவிடு...

உன் பெண் இனங்களை
காத்திடு...

பெண் இனத்தை மதித்திடு...

பாரதி காண நினைத்த
புதிய பெண்ணாய் உருவெடு...

நீயாய் தலை நிமிரு...

உன்னையும்
பெண்ணினத்தையும் காத்திடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Oct-14, 3:35 pm)
பார்வை : 81

மேலே