வகுப்பறை சிற்பியே

குருகுல
மரபு உடைந்து
பள்ளிக்கல்வி
புதுமை முளைத்து
நாட்டு மக்களை
நாட்டு மக்களாய்
வடிவமைக்க
நாட்டப்பட்டது
கல்வியின் கழகம்.

செல்வம் அழியும்
கல்வி சாகாது...
நாளெல்லாம் சொல்லப்பட்டது
இளைய உள்ளத்தின்
இதயக்கனவுகள்
இங்கேதான்
வடிவமைக்கப்படுகிறது.

காதலும் சரி
கொள்கையும் சரி
கட்டப்படுவது இங்கேதான்.
மாணவனை செதுக்கும்
சிற்பி
ஆசிரியன்.
சிலர் இப்போது
ஆ!சிரியர் ஆணார்கள்
கலவிக்கு
முதன்மை தந்து
கல்வியை மறந்துவிட்ட
சிலர்தான்
அந்த ஆ! சிரியர்கள்.

பள்ளியின் சிற்பியையும்
செதுக்கியவன்
ஒரு ஆசிரியன்.
தவறு செய்த
ஒருவனால் ...
சிற்பிக்கும் உடைந்தது மானம்.

தாயை
தாய்மையை
கொச்சைப்படுத்தும்
ஆசிரியர் சிற்பியல்ல.
ஆயிரத்தில்
ஒரு அசிங்கக்கழிவு.

அறிவியல்
வளர்ந்தபோதும்
அன்பின் அடர்த்தியை
ஊட்டிவளர்க்கும்
குழந்தைதான்
உண்மை அறிவைப்பெரும்.

தாய்மையின்
தங்கத்தோனி கிடைக்காத...
இருள்வந்து கவ்வும்
குழ்ந்தை மனதின்
கடைசி உச்சம்
இந்த அசிங்கச்சிற்பி.

தேர்வென்பது
மனப்பாடம் செய்வது
மட்டுமில்லை...
பணப்பாடம் செய்வது
மட்டுமில்லை...
உளப்பாடத்தை
தேர்வில் தெரிந்துகொண்டால்தான்
ஆ!சிரியர் ஒழிந்து
ஆசிரியச் சிற்பி
இந்த அகிலத்திற்கு
கிடைப்பார்கள்.

சு.விமல்ராஜ்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
எ.வி.சி.கல்லூரி,
மன்னன்பந்தல்,
மயிலாடுதுறை.

எழுதியவர் : vimalraj (23-Oct-14, 5:35 pm)
Tanglish : vagupparai sirpiyae
பார்வை : 94

மேலே