பொறுப்பாய் மழை மனம் வெறுப்பாய் மனிதன்
இடைவிடா மழை
வான் தந்த கொடை
வழிந்தோடும் நீர்
வரப்பிட வழியின்றி
கடலோடு சங்கமித்து
கடலில் கரைத்த காயமாகும்
வேண்டி தவிக்கும் மக்களுக்கு
தந்தாள் சேமிக்க தெரிவதில்லை
தீண்டலாக மாறும்
தினம் பொழிந்தால் மழை
கொட்டி தீர்த்தாலும்
கெட்டிகாரனாக இல்லா மக்களுக்கு
குப்பை தொட்டியாய் தான் தெரியும்
கடல் நீர் ஆவியாகி
பறந்து போகும் மேகமாகி
வானம் சுமந்து கருவாகி
உருமாறி மண்ணில்
உயிர்த்துளியாய் பெய்யும் மழை !
இருக்கும் வரைக்கும்
தெரியா பெருமை
இழந்தபின் அழுவதென்ன ?!!
குறைவாய் இருந்தால் தான்
மழைக்கு பெருமை அதுபோலே
எல்லாமே குறைவாய் இருக்கையிலே
மனதுள் பாசம் ஏக்கம் பொங்கும்
நிறைவாய் இருந்தாலே
வெறுப்பாய் தவிர்க்கும் ...!