அச்சம் விடு
அச்சம் விடு!
அச்ச் மென்ன மிச்சமடா?
அச்சன் தந்த சொத்தாடா?
துச்சமென தூக்கிப் போட்டா
உச்சம் உந்தன் பக்கமடா!
அச்சம் உன்னை வெல்லுமடா!
அடிமை யாக்கிக் கொல்லுமடா!
அச்சம் விட்டால் சாவுமுன்னை
அண்ட அது அஞ்சுமடா!
அச்சம் கொடும் பாவமடா!
ஆக்கம் கெடும் சாபமடா!
பச்சம் இல்லா பாலையடா!
பழகும் நெஞ்சம் இல்லையடா!
அஞ்சும் உள்ளம் பள்ளமடா!
அமைதி யில்லா இல்லமடா!
பகலறியா இருளதடா!
பாழடைஞ்ச கல்லறைடா!
சுற்றம் வந்து சேராதடா!
சொந்தம் கண்டு தேறாதடா!
அச்சம் யாரும் நம்பாதடா!
செத்துச் செத்துச் சாகுமடா!
அச்சம் ஒரு அவதியடா!
அறி யாமைக் கைதியடா!
தன்னை நம்பும் ஞானமடா!
உன்னை விடும் அச்சமடா!
கொ.பெ.பி.அய்யா.