அற்புதம் ஹைக்கூ

*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (27-Oct-14, 9:42 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 154

மேலே