இன்னொரு மழையே என்று வருவாய் எனைத்தேடி

இன்னொரு மழையே என்று வருவாய் எனைத்தேடி

என்மேல்விழுந்த
ஏளனச் சொல்லின்
எதுகை மோனைகள்
என் எலும்புவரை ஊடுருவி
எனை எரித்த
எக்காளப் பொழுதது ?

கோபத்தின் கொடூரம்
கொடிகட்டி பறக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
எனை மறந்தன
என் மதிகள் ...

அது ஒரு மழைக்காலம்
அவசரம் தொலைத்து
அங்கங்கே மிச்சமிருந்தன
அம்சமாய் சில துளிகள் ...

தூக்கம் தொலைத்த கண்களின்
துக்கம் தொலைத்தன
துள்ளலாய் விழுந்த துளிகள்

எங்கிருந்து வந்தனவோ
என் மனம் குளிர
எனைத் தாக்கிய
எல்லா துளிகளும் ...

உள்ளம் குளிர
உடலை இழுத்து
தானாய் நகர்ந்தன
தளிர் கால்கள் ...

சிறுசிறு சில்லிப்பில்
சினம் தணிந்து
சிறகு பூண்டன மனம் ...

புல்களின் புசுபுசுப்பில்
உடல் கிடந்து நனைகையில்
உடைந்து நொறுங்கின
உயிர்வரை உசுப்பிய
உணர்வுகள்...

நனைத்திட்ட பறவைகள்
நவிழ்ந்திட்ட கானங்கள்
தினம் நடந்த பாதைகள்
திமிர்கொண்ட ஓடைகள்
கிளர்ந்திட்ட நரம்புகள்
கிடைத்திட்ட மகிழ்வினில்

இதயம் தேடியது
இன்னொரு மழையை
இனியென்று வருவாய்
'இதயசுத்தி' செய்ய
எனைத்தேடி ?
-------------------------------------------
( மறு பதிவு -குமரேசன் கிருஷ்ணன் )

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (27-Oct-14, 7:26 pm)
பார்வை : 281

மேலே