அவளும் நானும்
அழகினில்,பழகிடும் காதல் செய்வதில்
*****அருகினில் இதந்தரும் வாசம் வீசிடும்
*****அமுதவள் முகத்தினை நாளும் தேடிடும் -மனத்தோடு
*******அனுதினம் உருகிடும் உள்ளம் கேட்டிடும்
*******அனைத்தையும் நனவினில் நானும் எய்திடும்
*******சுகத்தினைப் பெறுவதில் சூழும் நாளது -வரவேண்டும்
மழையினில் ஒருமுறை சேர்ந்து நனைந்திடும்
*****பொழுததில் கரங்களை தோளில் சாய்ந்தவள்
*****இருகிடப் பிடித்திட ஆன தென்னென -அறிவாளோ?
*******குளிரதில் சுரம்வர வெப்பம் மேவிட
*******விழியிரண் டதிலுமே மோகம் பாய்ந்திட
*******தடுத்திடும் மரபினைக் காத்து நின்றதை -உணர்வாளோ ?
குழைந்திடும் சிரிப்பினில் கூறும் வார்த்தையில்
*****அழைத்திடும் முறையினில் ஆடும் கண்களில்
*****அடிக்கடி கடித்திடும் பூவி தழுகளில் -புதைவேனோ ?
*******முறைத்திட முனைந்திட வேர்த்து போகுமே
*******அணைத்திட துடித்திட அன்பும் நீளுமே
******* எனதவள் எனதவள் என்று கூவியே -திரிவேனே
வழங்கிடும் கதிரவன் நின்று ஓயினும்
***** கடலதின் அலைகளும் சென்று மாயினும்
*****உலவிடும் வளியதும் ஓய்ந்து நிற்பினும் -குறையாதே
*******மனதினில் இருந்திடும் மாண்பு காதலும்
******* தினந்தினம் பெருகிடும் இன்னும் கூடிடும்
*******இனியவள் கரந்தொட தாலி கட்டிட -அலைமோதும்