பொன்மொழிகள் சில

முரண்பாடுகள் இன்றி வாழ்க்கை இல்லை.
அன்பைக்கொடு ஆதரவைக் கொடு.
எலும்பிலாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் திரும்பும்.
தாயிலே கெட்டவளும் இல்லை சாவிலே நல்லதுமில்லை.
உன்னை நல்லவனாக்கி கொள்.
வீண் பெருமை எவரையும் வீழ்த்தி விடும்.
கொடுப்பூரைத் தடுக்காதே.
விலை உயர்ந்த பொருள் ஆசை இன்மை.
இரகசியம் என்பது நட்பிற்குரிய கற்பு.
முறை சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும்.
இனிய சொற்கள் வலிமை நெஞ்சை உருக வைக்கும்.
வலிமை மன உறுதியிலிருந்து உருவாவது.
தியாகத்திலும் பார்க்க பணிவு மிகவும் பெரியது.
வாழ்வு என்னும் மலரில் அன்பு என்பதே தேன்.
துடிப்பான எண்ணம் சோக கீதம் பாடாது.
செல்வம் குவிக்கப்படும் இடத்தில் மனிதர்கள் அழிகிறார்கள்.
உன்னை நீயே சீர் தூக்கி பார் உயர்வு உந்தன் கையில்.
உண்மையான அமைதி நீதியின் கனி ஆகும்.
கடமை என்னுடையது பலன் ஆண்டவனுடையது.
பண்புள்ளவன் உத்தமன்.
ஆர்வம் உண்டேல் ஆற்றல் வளரும்.
பேச்சை விட மவுனமே சிறந்தது.

எழுதியவர் : புரந்தர (28-Oct-14, 6:03 pm)
Tanglish : ponmoligal sila
பார்வை : 138

மேலே