கடன் இல்லாமல் ஒரு நாள்

வீடு வாங்க கடன்..
----வண்டி வாங்க கடன்..
துணி வாங்க கடன் ..
-----கல்வி பெற கடன் ..
மணம் புரிய கடன் ..
-----கிரெடிட் கார்டு அடைக்க கடன்
குழந்தை பிறப்பிற்கு கடன்
-----மனிதனை மயானத்திற்கு அனுப்ப கடன்
வர்த்தகத்திற்கு கடன்
-----கடனை அடைக்க கடன் .......
கடன் ...கடன் ... கடன் .....
கடல் அலைகள் போல் கடன்
---------------------------------------------------------------------------------------
இறப்பிற்கு முன் ஒரு சிறிய ஆசை
கடன் இல்லாமல் ஒரு நாள் வாழ வேண்டும்
வேண்டினேன் கடவுளை ...
நிறைவேற்றினார் ஆசையை ...
ஆனால்
கடன் இல்லாமல் வாழ்ந்த
அந்த நிமிடம்
சந்தோசத்தில்
இலவசமாய்
மூச்சு நின்று விட்டது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------