PhD

ஆடிட்டிங் தான்
இங்கு ஆயுத பூஜை
சம்பளம் எல்லாம்
அப்பாவியோட ஆசை.
ஐந்து மணிக்கும், ஐந்தாம் தேதிக்கும்
அப்படியொரு எதிர்பார்ப்பு.
அதை பார்க்க தானோ மேஜையின்
முன்னே ஓர் நாட்குறிப்பு.

கேளிக்கையாய் ஒரு கோரிக்கை வைத்து,
காலை உணவு சாப்பிட்ட கைகளை
துளி வாசமும் வராமல் கழுவி விட்டு,
கைகோர்த்து ஓர் உண்ணாவிரதம்.
ஆஹா அடடடா
உண்ணாவிரதம் செரிக்க
டீயும் பன்னும் வேறு சரி விகிதம்.

ஓரமாய் ஒதுக்கு புறமாய்
அரசாங்க தொட்டிலில்,
அயராது கத்திய குழந்தை போலே
அழகாக தூங்கி விட்டு,
முகத்தை கழுவி, வண்ணம் பூசி,
ஒய்யாரமாய் உருண்டு
வீடு போய் சேரும் -
உன் வேலை வாங்க
நீ கட்டிய பணத்தை
திரும்ப பெற
என்னை வாங்கும் வேலைக்கு
ஆராய்ச்சி என்று பெயர்.
என்னை மாணவன் என்று அழைக்காதே
காவலன் என்று அழை.
நீ செய்யும் பண ப்ராத்தலை
என் தொண்டைக்கு கீழே புதைத்து
வாய் திறக்காமல் உன்னை காப்பாற்றுவதால்!
நடிகன் என்று அழை.
படும் வேதனை யாவையும்
சிரிப்பாக்கி என் தாய் முன் நடிப்பதால்.


சர்க்கரம் பதித்து
உருண்டோடும் உன் வாகனம்
நான் நாள் முழுதும்
உனக்காக நடந்த
என் தடயம் அழித்து செல்கிறது.
பாய்ந்து உன் முகத்தில் காரி உமிழ
சட்டென உள்ளம் குமுறியது.

இந்த சைக்கிளின் ஒற்றை சக்கரம் மூளை
மற்றொன்று இதயம்.
வெயிலுக்கு சில முறை இறங்கி போவேன்.
நிரம்பி வழிகையில் வெடித்து சிதறி போவேன்.
கவனம் தேவை.

எழுதியவர் : SATHYATHTHAN.A (28-Oct-14, 6:33 pm)
சேர்த்தது : SATHYATHITHAN.A
பார்வை : 162

மேலே