நடிகனின் மறுமுகம்

உண்மையை மறைத்து
பொய்யாக சிரித்து
மெய்யாக நடித்து
உள்ளதை புதைத்து
விபசாரத்தை பெருக்கி
மனிதனை மயக்கி

சக மனிதனின் வாழ்க்கை
தரத்தை குறைத்து
அவர்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த

நிஜ வாழ்வில் ஒன்றையும்
விளம்பரத்திற்காக ஒன்றையும்
பச்சோந்தியை விட கேவலமாக
இடத்திற்கு இடம் மாறுவான்
பணம் வேண்டும் என்பாதால் !!

விளை நிலத்தை பாழாக்கும்
உடல்நலத்தைக் கெடுக்கும்
உபயோகமற்ற விநியோக
விளம்பரமென தெரிந்தும்
வெட்கப் படாமல்
பல் இழித்து காட்டி
நல்லதென சொல்லவதும்
நம்பி வாங்குங்கள் என்பதும்
கேடுகெட்ட நடிகனின் பிழைப்பு !!

கம்யூனிசம் பேசி
கார்பரேட் கம்பனியை
எதிர்த்து படம் ஆக்கி
மக்களுக்காக என
மீண்டும் விளம்பரம் தேடி
கொள்ளும் அநியாய
துறை நடிப்புத்துறை
என்றால் மிகையாகது !!

இத்தனையும் செய்துவிட்டு
இவர்களே அரசியலில்
இறங்கினால் இந்தியா
எங்கே போகும்
சிந்தியுங்கள் மக்களே !!

எழுதியவர் : யாதிதா (29-Oct-14, 12:05 pm)
பார்வை : 269

மேலே