என் காதல்
நான் வரைந்த ஓவியம்
உயிர் பெறவில்லை
நான் எழுதும் கடிதம்
சொற்கள் கிடைக்கவில்லை
நான் படித்த புத்தகம்
பக்கங்கள் முடியவில்லை
நான் நடந்த பாதைகளில்
முட்கள் நடனமாடின
நான் எழுதய கவிதைகள்
நெருப்பில் வெந்தன
எனது பேனாவும்
என்னை பார்க்காது
தலை குனிந்து உன் பெயரை
வரைந்திட - இதோ நித்தம்
உன் நினைவில் நான்....
என் கவிதைகள் கூட
உன்னை சேர்ந்திட அனுமதி
இல்லையோ என் காதலே?
என் நினைவென்னும் பூந்தோட்டமதில்
ஒருமுறை ஏனும் பூத்துவிடு
என் அழகே!
பூக்களை ரசிக்க தெரியாதவன்
இன்று ஏனோ பூந்தோட்டத்தின்
காவல்காரனாக துடிக்கின்றேன்....
நீண்ட நாட்களாய் மௌனம் காத்தது
போதும் என் காதலே
விரைவில் என்னை சேர்ந்துவிடு!!!!
காத்திருக்கிறேன்.....