நீளும் கவிகள்
கண்கள் கலந்தாகி போனது ,
கருத்துகளும் நமதென்று ஆனது ,
அடுத்தென்ன !! அடுத்தென்ன !!
கல்யாணம் எதிர் நோக்கபட்டது
கனவெல்லாம் அதுவே நிறைந்தது !!
நீ என்றால் அத்தனையும் ஆனந்த மாயம் ,
நீ உடன் இருக்கையில் , நானும் முழுமயம் !
நார் விழிகளில் கனவுகளின் பரிமாற்றம் ,
நெகிழ் மனதில் எண்ணங்களும் ஒளிமயம் !!
முட்டாள் தனங்கள் புரிந்தாலும் ,
மோதி மோதி பூரிக்கிறோம் !
இட்டால் களி வழியுமே ,
முதன்மையாய் நாமும் இணைகிறோம் !
இருமனம் ஒருமையாய் திருமணம் எதிர்நோக்க ,
இடைவெளி இல்லா தொடர்ச்சியாய் கனவுகளும் பின்தொடர ,
மீட்பென்பதும் இல்லை , நீளும் கவிகளுக்கும் !