எண்ணிப் பார்க்கிறேன்
காணிக்கைப் பெட்டியினைப் பார்த்த வண்ணம்
==கர்த்தர்,ஏன், ஆலயத்துள் அமர்ந்தி ருந்தார் ?
தோணிக்குள் இருந்தவர்கள் பயங்கள் நீங்கத்
==தொடங்கிவைத்து நின்றவராய்ப் பார்த்து நின்றார்!
கோணிக்கொள் ளாதமனம் கொண்ட வர்கள்
==கொடுப்பதனைக் கண்டு,மனம் ஆற்றி நின்றார்!
ஏணிக்குப் படிகள்,அவர் எடுத்து வைத்தே
==ஏறிடட்டும் பரலோகம் என்றி ருந்தார்!..........
வானத்தின் பலகணிகள் திறந்து விட்டு
==வருஷிக்கச் செய்திடுவர் ஆசீர் வாதம்!
ஞானத்தின் பலகணியைத் திறந்து காட்டி,
==நற்சிந்தை, சொல்,செயல்கள் கூட்டு மையா!
தானத்தைச் செய்வதுவாய் எண்ணி டாமல்,
==தனக்குள்ள பகிர்ந்திடவே தயவு செய்யும்!
மானத்தைப் பெருமைகளை உமதாய் எண்ணி
==மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே அடைத்து மையா!
------- ++ ------------