குறும்பாச் சிதறுது

செவ்வாய் எதிர்வரவே
சிறிதும் வாய்திறக்க
ஒவ்வாத மனத்தோற்கு
எவ்வாறு வருமாமோ
பொன்னும் புதனுமே!
=====
பூவின் மகரந்தம்
புதுக்கவிதை போலழைத்தும்
நாவுலர்ந்த பேருக்கு
நறுந்தேனும் கிட்டிடுமோ?
=======
நிறைவளராப் பாத்திகளில்
நின்றெழும்பும் நெற்பயிர்கள்
துறைவிடுத்துச் சென்றாலும்
குறைவில்லாப் பயன்தருமோ?
=======
வலியிருக்கும் வாழ்விருக்க
வழங்குகிறோம் இலாவசங்கள்!
கிலியிருக்கும் மட்டும்தான்
கேள்வியுண்டு! புரட்சியில்லை!
=====
எவரைப்போல் வருவதென
எண்ணுவதில் தவறில்லை!
சுவரைவைத் துத்தானே
சித்திரங்கள் எழும்புவதும்!
+++++
நதியுறக்கம் எம்மக்கள்
நலிவடையும் குடிமயக்கம்!
மதியுறக்கம் எம்மக்கள்
பிறமொழியில் பயில்மயக்கம்!
கதியுறக்கம் இலவசங்கள்
கட்டிவைத்த ஒருகிறக்கம்!
==== ====
குடம்பாலில் துளிப்பால்தான்
கொட்டுகிறார் என,நினைத்தோம்!
தடவியலார் சொன்னார்கள்
தண்ணீர்,பால் ஆச்சுதென!
=== ====
இருப்பவர்கள் பிழையானால்
இயக்கங்கள் திருத்திடுமோ?
செருப்பறுந்த கால்களுமே
சீரான நடைபெறுமோ?
======
கடமைப்படு வாழ்வெல்லாம்
கடன்பட்ட வாழ்வாமோ?
கடமையினில் நீ,உயர்வாய்!
கடனாலே நீயழிவாய்!
==== ====
ஆசைப்படு! ஆசைப்படு!
அதில்,பலரும் வாழப்படு
அழியவிடு! அழியவிடு!
சுயமுனக்குள் அழியவிடு!
===== ====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Oct-14, 8:59 am)
பார்வை : 67

மேலே