வாடிய ரோஜா-----ப்ரியா

அன்று காலை துயில் எழுந்த நந்தினியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை மனது படபடத்துக்கொண்டிருந்தது நேற்றுநடந்த அந்த சம்பவம் அவள் மனதைப்போட்டு உலுக்கிக்கொண்டிருந்தது இரவு முழுவதும் அழுது அழுது இன்று அழுவதற்கு கண்களில் நீர் இல்லாமல் தவித்தாள்......

ஏதோ நினைத்தவள் செல்போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தாள் ஆனால் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை,

பிரமைப்பிடித்தவள் போல் காணப்பட்டாள் நந்தினி.....

ஒரு பட்டாம்பூச்சியாய் வீடை சுற்றுபவள் இன்று இப்படி இருப்பது வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் கஷ்டப்படுத்தியது,

சிறிது நேரத்தில் குளித்து முடித்து தனது சொந்த வேலைகளையும் முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் நந்தினி....!

"ஏய் நந்து நில்லுடி இந்தா டிபன் சாப்பிட்டுட்டுப்போ" என்று அம்மா கத்த எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கல்லூரிக்கு விரைந்தாள்.

வகுப்பறைக்கு சென்றதும் அவள் அப்படியே டெஸ்கில் தலை சாய்ந்துப்படுத்துக்கொண்டாள்............!

அவளது நெருங்கியத்தோழி அவளிடம் என்னடி என்ன ஆச்சு என்று வினவினாள்...??

பதில் சொல்லவில்லை,,,,

மறுபடியும் என்னடி சொல்லு..... "வீட்டுல அம்மாக்கிட்ட சண்ட போட்டியா? அப்பா திட்டினாங்களா...? இல்லை ஆனந்த் ஏதாவது சொன்னானா...????என்றதுதான் தாமதம் அழுதே விட்டாள்.

ஏய் அழாதடி என்னன்னு சொல்லு சொன்னாதானே தெரியும் என்று கன்னம் தடவினாள் தோழி......விம்மி விம்மி அழுதாளே தவிர பதில் சொல்லாமல் அவள் மடி சாய்ந்துகொண்டாள்..

அவள் நினைவுகள் இரண்டு வருடத்திற்கும் முன்பு சென்றது........

அன்று முதல் நாளாக கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள் நந்தினி அதுவரைக்கும் குழந்தைத்தனமாய் இருந்தவள் கல்லூரியில் நடக்கும் சகல செய்கைகளை பார்த்ததும் இப்படியும் ஒரு வாழ்க்கை உண்டா என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக்கொண்டாள்....!

அங்கு சென்ற பிறகு பலமாற்றண்க்களை உணர்ந்துகொண்டாள்,பல விஷயங்களை தெரிந்தும் கொண்டாள்.

நாட்கள் சென்று கொண்டிருந்தது இவள் முதலாமாண்டு என்பதால் கொஞ்சம் பயந்துதான் நடந்தாள் நண்பர்களும் அதிகம் கிடையாது அதுவரைக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்ததால் தோழிகளுடன் மட்டும் அரட்டையடித்து கொண்டிருப்பார்கள் இப்பொழுது ஆண்களும் பெண்களும் என்பதால் அந்த அளவுக்கு ஜாலி இல்லை சுதந்திரமில்லை என்பது இவளுக்கு வருத்தமாக இருந்தது....!

இவளுக்கு மட்டுமல்ல மற்ற மாணவர்களுக்கும் இது இரு வித்தியாசமான புதுவித அனுபவமாகதான் இருந்தது.

ஒருநாள் மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் இவளைப்பார்த்து கிண்டல் பண்ணினான் அதை மற்றவர்களும் பார்த்ததால் இவளுக்கு அவமானமாக இருந்தது அழுதுவிட்டாள்.

அவள் அழுதது அவன் மனதை மிகவும் பாதித்துவிட்டது அடுத்தநாளே அவளிடம் வந்து "உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்ல இவள் பதில் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்....!

தினமும் அவன் அவளை பார்க்கத்தவறவில்லை இவளும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் வெறும் பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே நடந்துகொண்டிருந்தது அவன் காதலுக்கு அவள் பதில் சொல்லவில்லை.....

இன்னிக்கு எப்டியாயவது அவன் காதலை மறுபடியும் சொல்லவேண்டும், சொல்லமாட்டானா...? என்ற ஏக்கத்தில் கல்லூரிக்கு வந்தாள் நந்தினி.

கல்லூரி முழுவதும் அவள் கண்கள் அவனைத்தேடின ஆனால் அவனைக்காணவில்லை.

லேப்,க்ரவுண்ட்,கேண்டீன்,லைப்ரரி,அவன் நிற்கும் இடங்கள் அனைத்திலும் இவள் பார்வை பட்டது ஆனால் ஆனந்தை எந்த இடத்திலும் காணவில்லை..?????

தேடித்தேடி சோர்ந்து போன அவளது கண்கள் ஏமாற்றத்தில் ஓய்ந்தது மாலை நேரம் தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்லும்போது அவன் அங்கு இவள் வருகைக்காய் காத்திருந்தான்.

அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவள் பக்கத்தில் வந்து பேச ஆரம்பித்தான் அவளும் பேசினாள் அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு சிட்டாய்ப்பறந்தாள்....!

ஆனந்த் நந்தினி ஜோடி என்றால் கல்லூரியில் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் பேராசிரியர்கள் முதல் வேலையாளிகள் வரை எல்லாருக்கும் தெரியும் அவ்வளவுக்கு ஜோடியாய் நடந்தனர் இருவரும்...!

காதல் விஷயத்தில் கல்லூரியிலுள்ள மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது இவர்கள் காதல்தான் அவ்வளவு பிரபலம்..

வீட்டிலுள்ளவர்களுக்கு நல்ல அன்பு மகளாகவும் கல்லூரியில் அவனது அன்புக்காதலியாக நாட்களைக்கடத்திக்கொண்டிருந்தாள் நந்தினி.

தோழியின் கனத்த குரலில் நினைவுகளிலிருந்து மீண்டவள் சாப்பிடுவதற்கு சென்றாள்.

சாப்பிட மனமின்றி மறுபடியும் அவனின் நினைவில் சென்றாள்.

நேற்று வழக்கம்போல் தன்காதலனை கண்கள் தேடின மதியம் வரைக்காணவில்லை மாலையில் அவனை சந்தித்தவள் அவனருகில் சென்று சந்தோஷமாய் சிரித்துக்கொண்டே "நலமா நான் தந்த ரோஜாச்செடி" என்று கேட்டாள் அவன் பதிலேதும் சொல்லாமல் புனகைத்துவிட்டு சென்றான்.

இவளுக்கு அவனின் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை தோழி ஒருத்தியின் மூலம்தான் தெரிந்துகொண்டாள் அவன் வேறு ஒரு மாணவியுடன் காதல் கொண்டுள்ளான் என்பது..........

இவள் கொடுத்த ரோஜாவின் மொட்டு பூத்து விரிந்து உதிர்ந்துவிட்டது அந்த இடத்தில் வேறு ஒரு ரோஜா வளர்ந்திருப்பதை தெரிந்து கொண்ட இந்தநாள் அவள் தலையில் இடி விழுந்தார்போல் உணர்ந்துகொண்டாள்.....!

மாலை வீட்டிற்கு செல்லும் போது அவள் கண்கள் பழையபடி அவனைத்தேட ஆரம்பித்தது...??!!!!!!!!.

எழுதியவர் : ப்ரியா (31-Oct-14, 1:10 pm)
பார்வை : 595

மேலே