எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா
![](https://eluthu.com/images/loading.gif)
முன் குறிப்பு :
இப் பதிவை படிப்பவர்கள் பலருக்கு படத்தை பார்க்கும் போது வயிறு பிரட்டும் தலை சுற்றும். இருப்பினும்
யதார்த்த உண்மைக்காக சிதைக்கப்படும், சிதையும், சிதைந்து கொண்டு இருக்கும் கருக்களுக்காக சமர்ப்பணம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தற்காப்பு ஆயுதம்
கற்காததால்
தாறுமாறாய்
சிதைக்கப்படுகின்றோம்
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா ??
உலகில் பிரவேசித்தால்
உங்களுக்கு வலி அதனால்
இருட்டில் எங்களுக்கு
வலியை அளிக்கின்றீர்களே !
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா???
பணம் எனும் மூன்று எழுத்திற்காக
உயிர் எனும் மூன்று எழுத்தை
அழிக்கும் மருத்துவர்களே !
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா???
பெண் கருவை
பேணி காக்காமல்
கத்தி முனையில்
குத்தி கலைக்கின்றீர்களே !!
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா???
என் அக்காவையோ
அண்ணனையோ
உயிரோடு சிதைக்க
சம்மதிப்பீர்களா ?
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா???
சிதைக்கப்பட்டதால்
சிறிய மன நிம்மதி ஆனால்
பீஸ் பீஸ் ஆக சிதையும்
எங்கள் வலியை உணர மறுக்கின்றீர்களே !
எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா???
அறிமுகம் இல்லாத
தாய் தந்தையர்களே !
ஒரு வேண்டுகோள்!!!!
கரு கலைப்பு
என்ற எண்ணத்தை
சிதையுங்கள்
கருவாகிய எங்களை
சிதைக்காதீர்கள் !!!!
எங்கள் வலியை உணருங்கள்
நீங்கள் செய்யும் தவற்றுக்கு
எங்களை பலி ஆடாக்கதீர்க்ள !!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------