நட்பு

நடை பழகிய நாட்களில்
என் தந்தையின் நம்பிக்கையில்
நீ இருந்தாய் !

அரவணைக்கும் வேலையில்
என் அன்னையின் அன்பினில்
நீ இருந்தாய் !

அரம் சொல்லித் தருகையில்
என் ஆசானின்
அக்கரையில் நீ இருந்தாய் !

முகம் தெரியா மனிதர்களின்
முதல் புன்னகையில்
நீ இருந்தாய் !

முதன் முதலாய் அரும்புகையில்
என் காதலியின் கண்களிலே
நீ இருந்தாய் !

கவியொன்று நான் எழுதுகையில்
வரும் கைதட்டலில்
நீ இருந்தாய் !

காலை மாலை இரவு என
காணும் யாவிலும்
நீ கலந்திருந்தாய் !

கற்பென்ற சொல்லுக்கு
மறு இலக்கணமாய்
நீ இருந்தாய் !

நாடி வந்த யாவர்க்கும்
நல்லதொரு வால்வளித்தாய் !

நட்பே !
நீ இல்லையெனில்
நவநாகரீக உலகமிது
நரகமாகிப் போயிருக்கும் !

எழுதியவர் : முகில் (1-Nov-14, 12:30 am)
Tanglish : natpu
பார்வை : 296

மேலே