தோற்றினும் முயற்சிசெய்

குழம்பி தெளி
குருதியில் தெளி
குன்றில் புதைந்து
வென்று எழு !!

சோம்பல் முறி
சுயமே நெறி
தொடர்ந்து எழு
தோல்வியை விடு !!

கவலை அரு
முயற்சியே சோறு
முழு பயிற்சி தேடு
முன்னேறி ஓடு !!

சரிவை சரிசெய்
சலனத்தை சலவைசெய்
வெற்றியை அடைய
தீட்டிவிடு படையை !!

சிந்தனை சிந்தையில்
சீர்திருத்தி வந்துனை
சந்தையில் வெற்றி
மாலை பாடட்டும் !!

தோற்று விடு
துவண்டு விடாமல்
தேற்றி விடு
உன் மனதை

ஆற்றி விடு
ஆறுதல் பணியை !!
ஏற்றிவிடு முயற்சியை
வெற்றி பல்லக்கில் !!




இரா.மோகனசுந்தரி ,
M.E (Software engineering),
ssn college of engineering,
rajiv gandhi salai (omr),
kalavakkam - 603110,
kancheepuram dist,
chennai.

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (1-Nov-14, 10:33 pm)
பார்வை : 118

மேலே