தாவணி தென்றல்

பன்னிரெண்டாம் அகவையில்
பச்சை தாவணி
உரசிச் சென்றது
படபடத்தது
மனசு விழித்துக்
கொண்டது

பதினைந்தாம் அகவையில்
பக்கத்து வீட்டுப் பெண்ணின்
கீற்றுப் புன்னகை
வீசியது தென்றல்

கல்லூரியில்
முதல் காதல்
முடியும் என்று
தெரிந்தே
முளை விட்டது


கல்யாணப் பந்தலில்
இவள் இருந்தாள்
அவளின் நினைவுகளோடு
மனம் பயணித்தது

இன்று
இதயத்தின் இறுதித்
துடிப்புக்கூட
இவளைக் கேட்டுத்தான்
துடிக்குமோ என்னவோ?


எப்படி நிறைந்தாள்
என்னுள்?


இதம் நிறைந்த
பேச்சா?
மனம் நிறைக்கும்
புன்னகையா?
என் நிறை குறை
அறிந்த செயலா?


எப்படி நிறைந்தாய்
என்னுள்?

எழுதியவர் : இரா . அருணன் (3-Nov-14, 7:34 pm)
Tanglish : thaavani thendral
பார்வை : 113

மேலே