பாஸ்வோர்ட் மனசு காரி

*
பாஸ்வோர்ட் மனசு காரி
பாசமான உறவு காரி
என் காதல் பசி ஆற்றாத சமையல் காரி
*
ஹவுஸ்புள் ஆன திரையரங்காடி நீ
என் காதல் படம் பார்க்க ஒரு
இடம் கிடைக்காதா
*
உன் மனதில் என்னுடைய நட்பு
அமர்ந்ததால் என் காதல்
வெளியில் நிற்கிறதா
*
கல்லூரி சாலையெல்லாம்
கடற்கரை சாலை ஆகுமடி நீ
என் காதலை ஏற்றுக்கொண்டால்
*
நட்பாக வந்தா பேசுற
காதலோடு வந்தா ஏசுற
என் கனவில் நிலவே கண்கூசுற
*
குட்டி குட்டி கதைகள் மட்டும்
பேசி கொண்டுயிருந்தோமே
நட்பில்
என் காதல் பேனாவை பிடித்து
தொடர் கதை ஆக்குடி தோழி

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (3-Nov-14, 9:41 pm)
பார்வை : 123

மேலே