வசந்த காலம்
வசந்த காலம்...
==============
எரிமலையும் பூச்சொரியுது
எந்தன் தேசத்தில்
பாலையிலும் பூ மலருது
எந்தன் தோட்டத்தில்...
காலமிது எந்தன் வசம்
என் கனவு பலிக்குது
காத்திருந்தேன்... காத்திருந்தேன்...
என் காலம் கனிந்தது...
துளித் துளியாய் மழை விழுந்து
என் விழியை நனைக்குது
உப்பு பூத்த விழிகளையே
கழுவி துடைக்குது !!!.
நான் ஈன்றெடுத்த தேவதையோ
பொறியாளர் நிலையிலே - அவள்
பணிக்கு செல்லும் அழகை கண்டு
மகிழ்ச்சி பொங்குதே !!!
மகளின் தேவையறிந்து
செய்த காலம் மாறி போகுது
என் தேவையெல்லாம் என்னவென்று
அவள் கேட்கும் காலமானது !!!
இத்தனை நாள் பட்ட துன்பம்
எட்ட ஓடுது
வெட்டி சாய்ந்த முருங்கையிலும்
துளிர் எட்டி பார்க்குது !!!
இறைவனுக்கு நன்றி சொல்வேன்
என் மீது கருணைக்கு
அவனின் துணை என்றுமுண்டு
என் வாழ்வின் முழுமைக்கு !!!