பூவின் காதலன் -தேவி மகேஸ்வரன்
![](https://eluthu.com/images/loading.gif)
அழகு பூவே
அன்றாடம் வரும் காற்று பையன்
இன்றும் வந்தானா?
மென் பூவே உன்
சிவந்த கன்னம் தொட்டு
இன்னும் சிவக்க வைத்தானா?
பொல்லாத காதல் கதையெல்லாம் உன்
இல்லாத காதில் சொல்லி
சிலிர்க்க வைத்தானா ?
கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு
எதிரே உள்ள பூவொருத்தி
அவனை பார்த்து சிரிக்கிறாள்
சிலிர்க்கிறாள்
காற்று பையனை கொஞ்சம்
கயிறு கொண்டு கட்டி வை !