என் காதல்

என் காதல்
என் காதல் மௌனத்திலும்
மென்மையானது...........

அவள் கண் இரண்டின்
கண்மைய்யும் காந்தமாய் இழுக்கிறது.............

கல்லூரி சாலையில் அவள்
கால் இரண்டும் நடனமாட
அதை காண என் கண் இரண்டும்
காணாது காத்திருப்பேன்............



செவ்விதழ் வருடிய முத்தம்
ஒன்று உன்னிடம் கேட்கவில்லை
கனி இதழ் குவிய
சம்மதம்தா போதும்.............

எனது காயங்கள் உனது சந்தோஷங்கலானால்
நான் ஆயிரம் முறை காயப்படுவேன்
எனது சந்தோஷங்கல் உனது காயங்கலானால்
எனக்கு இந்த ஜென்மத்தில் சந்தோஷமே தேவை இல்லை..........



காற்றினில் தவலும் மெல்லிய
சிறகானது உனது உள்ளமானால்
அதை சுமந்து செல்லும் காற்றாய்
நான் இருப்பேன்..........

உன் பாதசுவடுகல் ஒவ்வொன்றின்
பின்னாலும் நான் வருவேன்
ஏனென்றால் என்றாவது ஒறு நாள்
அந்த சுவடுகல் எனக்காக நிக்காதா
என்று எதிர்ப்பார்த்து........



கண்கள் என்னும் கரை இல்லா
கடலில் விலுந்த என்னை
உன் வார்த்தைகள் கோர்த்து
என்னை கரை சேர்ப்பாயாக........

நீ ஒருமுறை சொல்லடி
பிடிக்க வில்லை என்று
என் என்னத்தை மாற்றிக்கொள்வேன்
மறு முறை சொல்லடி
பிடிக்கும் என்று இந்த
உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்



வானம் இடியாய் தாலம் போட
மேகம் மழையாய் பூ தூவ
மேக கூட்டங்கள் கூடி
மின்னலாய் ஒளி தர
தூரத்தில் கால் இரண்டும்
தரையில் இல்லாது காற்றினில் தல்லாட
பனி மூட்ட நடுவில்
பளிச்சிடும் மின்னலை போல் வந்துபோனால்


அவள் என்னில் தோன்றியது ஒரு நிமிடம்
அவள் மறைந்திட துடிக்கும்
ஒவ்வரு நிமிடமும்
என் மறனம் எனக்கு காத்திறுக்கும்............

பவளத்தை பூசிய அவள் கன்னங்கள்
இரண்டும் என்னை ஒவ்வருநாளும் வழுக்கிவிடுகிறது...........

முத்து எடுக்க கடலில் விழுந்தவன்
முத்தும் கிடைக்காது,
கரையும் காணாது தவிக்கிறேன்........

என் இமைகள் மூடும் தருனத்தில்
நீ உன் காதலை சொல்லடி அமு
என் இமைகள் உறங்க மறுத்திடும்..........

என் காதலின் வலி கொண்டு
வாழும் உன் ஒவ்வொறு தருனமும்
உன் வாழ்வின் இனிதாய் அமையும்.........

என் காதல் வரும் தருனத்தில்
தரும் சுகத்தை விட
என் காதல் பிரியும் தருனத்தில்
தரும் வலியே சுகம்.......... 

எழுதியவர் : புவனேஸ்வரன். தா (5-Nov-14, 6:25 pm)
சேர்த்தது : புவனேஸ்வரன்
Tanglish : en kaadhal
பார்வை : 130

மேலே