முதியோர் இல்லமே என் சொத்து
காடு கரை நான் சுத்தி
பச்ச வயல கல கொத்தி
சொச்ச நெல்லு தான் கொடுத்தான் முதலாளி!
அதை கை பட உரல் கொத்தி
அடுப்புல கொதி வச்சி சமச்சி
உங்க பசி தான் நான் போக்குனேன்!
என் வயிறு காய வச்சி
கட்டி வச்சேன் ஈர துணிய நெனச்சி வச்சி
என் உடலை உரு கொலச்சி!
கந்தல் துணி நான் கட்ட
பலரின் கனவான்கள் பல்ல காட்ட
நான் வாழ துணிஞ்சாலும்!
தீபாவளி பொங்கலுன்னு தான் வந்தா
ஆட்ட வித்து என் புள்ளன்னு
புது துணிய தச்சாலும்!
மழை தண்ணி மேலப் பட
துள்ளி குதிச்சு தான் ஒதுங்கல
பள்ளிக்கூடம் பக்கம்!
ஆனாலும் நான் படிக்கா படிப்பையும்
நீங்க படிக்க நாலு காசு சேத்து
உங்களை அனுப்பி வச்சேன் பள்ளிக்கூடம் பக்கம்!
என் இருப்ப மீறி
கண்ணாலாம் தான் செஞ்சு வச்சு
கலாவதி ஆகி போனேன்!
கடமை முடிஞ்சு போச்சி
உடமை தொலைஞ்சு போச்சி
மடமை கூடி போச்சி!
பெத்ததுகளும் ஏன் பெத்தனு கேட்க
வந்ததுகளும் நீ ஏன் சாகலன்னு கேட்க
நான் வாழ ஆதரவு கரம் கேட்க!
அப்போ எத்தனையோ பிள்ளைகள நான்
பெத்து!
இப்போ முதியோர் இல்லமே என்
சொத்து!